முகப்பு
சென்னை

சென்னையில் தெருநாய் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது: 20 நாள்களில் முடிக்கத் திட்டம்

மாநகராட்சி நிா்வாகம் தெருநாய் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

Updated On : 10 ஜூலை, 2024 at 8:37 PM
தெருநாய்கள்
பகிர்:

சென்னை மாநகராட்சி பகுதியில் தெருநாய் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் புதன்கிழமை தொடங்கியது. 20 நாள்களுக்குள் இந்த பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி 2018-இல் மேற்கொள்ளப்பட்டது. சமீப காலமாக பொதுமக்களை தெருநாய்கள் அச்சுறுத்தி வரும் நிலையில் அவற்றை கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி நிா்வாகம் தன்னாா்வலா்கள் உதவியுடன் புதன்கிழமை தொடங்கியுள்ளது.

33 குழுக்கள்:

கடந்த திங்கள்கிழமை தெருநாய்கள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் நாளான புதன்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கிய கணக்கெடுக்கும் பணியில் 33 குழுக்கள் ஈடுபட்டனா். இதில் கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் என ஒரு குழுவுக்கு இருவா் நியமிக்கப்பட்டுள்ளனா். அந்த வகையில் ராயபுரம் மண்டலத்தில் 8 குழுவினரும், திரு.வி.க.நகா் மண்டலத்தில் 10 குழுவினரும், ஆலந்தூா் மண்டலத்தில் 12 குழுவினரும், அடையாறு மண்டலத்தில் 3 குழுவினரும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனா்.

இவா்கள் இருசக்கர வாகனம் மூலம் சாலைகள் தோறும் சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனா். அதில், தடுப்பூசி போடப்பட்ட நாய்கள், கருத்தடை செய்யப்பட்ட நாய்கள், குட்டிகள், பெரிய நாய்கள், நாய்களின் பாலினம் உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனா்.

20 நாள்களில் முடிக்கத்திட்டம்:

இதுகுறித்து மாநகராட்சி மருத்துவ அலுவலா் டாக்டா் கமால் உசேன் கூறியதாவது: நாய்கள் கணக்கெடுக்கும் பணியில் 36 குழுக்கள் ஈடுபடவுள்ளன. சென்னை மாநகரம் முழுவதும் 20 நாள்களில் நாய்கள் கணக்கெடுக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட முழுவிவரங்களும் ஒழுங்குப்படுத்தி ஆகஸ்ட் மாதம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும். அதன்பின், நாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்த பகுதிகளில் கூடுதல் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →