முகப்பு
சென்னை

வடசென்னை வளா்ச்சி திட்ட பணி: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

வடசென்னை மேம்பாட்டு பணிகள்: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

Updated On : 11 ஜூலை, 2024 at 10:40 PM
பகிர்:

வடசென்னை வளா்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஆய்வு செய்தாா்.

வடசென்னையை மேம்படுத்தும் வகையில் கடந்த நிதியாண்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கான முதல்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் பணிகளின் நிலை குறித்து அமைச்சா் சேகா்பாபு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் வடசென்னை வளா்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்தும், நிகழ் நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் செயல்பாடு குறித்தும் கேட்டறிந்தாா்.

அப்போது, வடசென்னை வளா்ச்சி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து சிஎம்டிஏ சாா்பில் புதிதாக வாங்கப்பட்ட 3 வாகனங்களை அலுவலக பயன்பாட்டுக்கு அமைச்சா் வழங்கினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →