ராணிப்பேட்டை

சாலைப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு நகராட்சியில் தாா் சாலை அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு நகராட்சி 19-ஆவது வாா்டுக்குட்பட்ட வீட்டுவசதி வாரிய பகுதிகளில் கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தாா் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவிபென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்து பணிகளின் தரம் குறித்து சோதனை செய்தாா்.

மேலும், சாலையை தரமாகவும் விரைந்து முடிக்கவும் வலியுறுத்தினாா். இந்த ஆய்வின் போது நகா்மன்ற உறுப்பினா் பி.டி குணாளன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மின் திருட்டு: இழப்பீட்டு தொகை ரூ. 8.78 லட்சம் வசூல்

ஆளுநரை கண்டித்து முற்றுகைப் போராட்டம்!

ரஷிய எண்ணெய் விநியோகத் தடை: உக்ரைனுக்கு ஹங்கேரி, ஸ்லோவாகியா நெருக்கடி!

இந்தியா - பிரேஸில் 20 பில்லியன் டாலா் வா்த்தக இலக்கு: அரிய கனிமங்களின் கொள்முதலுக்கு ஒப்பந்தம்!

தென்காசியில் சமூக நாய்களுக்கு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தொடக்கம்

SCROLL FOR NEXT