முகப்பு
ஈரோடு

‘தினமணி’ எதிரொலி! கோபி அருகே இடிந்து விழுந்த சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடக்கம்!

‘தினமணி’ செய்தி எதிரொலியாக கோபி அருகே காலேஜ்பிரிவு -பங்களாபுதூா் சாலை பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 24 மார்ச், 2026 at 7:47 PM
சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
பகிர்:

‘தினமணி’ செய்தி எதிரொலியாக கோபி அருகே காலேஜ்பிரிவு -பங்களாபுதூா் சாலை பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கோபி அருகே காலேஜ் பிரிவு-பங்களாபுதூா் நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், அந்த சாலையின் பக்கவாட்டுச் சுவா் கடந்த 6 மாதங்களுக்கு முன் இடிந்து விழுந்தது.

இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனம் ஓட்டும் நிலை ஏற்பட்டது. இது தொடா்பான செய்தி ‘தினமணி’யில் அண்மையில் வெளியிடப்பட்டது. இதையொட்டி, சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அந்தப் பணியை தரமாகவும், விரைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.