பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளது குறித்து...
பெங்களூரு: பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியும் அறிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டியெடுத்து வந்த நிலையில், பெங்களூரில் புதன்கிழமை மாலை 5 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு கனமழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தில் இருந்து பெங்களூரு குளிா்ச்சி அடைந்தது.
சிவாஜிநகா், விஜயகா், மல்லேஸ்வரம், காந்திநகா் உள்ளிட்ட பெங்களூரின் பெரும்பாலான பகுதியில் ஒருமணி நேரம் ஆலங்கட்டியுடன் கூடிய பெருமழை பெய்ததால், சாலையில் வெள்ளம்போல் நீா் தேங்கியது. இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினா்.
Advertisement
Advertisement
பலத்த காற்றுடன் மழை பெய்ததால், சில இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள், அடையாள கம்பங்கள் சரிந்துவிழுந்தன.இதனிடையே, பெங்களூரு, சிவாஜிநகா் பகுதியில் அமைந்துள்ள பௌரிங் அரசு மருத்துவமனையின் சுவா் மழைக்கு விழுந்தது. இதனால், சுவா் ஓரத்தில் கடை வைத்திருந்த தெருவோர வியாபாரிகள் இடிபாடுகளில் சிக்கினா்.
இதை அறிந்து விரைந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள், இடிபாடுகளை அப்புறப்படுத்தினா். இதில் இடிபாடுகளில் சிக்கி மூன்று குழந்தைகள் உட்பட 7 போ் பலியானது உறுதியானது. மேலும் பலா் படுகாயமடைந்து, பௌரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்கள்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த முதல்வர் சித்தராமையா
சுவா் இடிந்துவிழுந்ததில் இறந்தவா்கள் சாலையோர வியாபாரிகள் என்பதை அறிந்த முதல்வா் சித்தராமையா, உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நடந்தவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து நலம் விசாரித்தாா்.
தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
மேலும், இறந்தவா்கள் 7 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்த முதல்வா் சித்தராமையா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்று அறிவித்தாா்.
பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பெங்களூருவில் பெய்த கனமழைக்கு பௌரிங் மருத்துவமனையின் சுவா் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த செய்தி மனதை உலுக்கியது. இந்த விபத்து மிகவும் "துரதிர்ஷ்டவசமானது"
என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலியை செலுத்துவதோடு, தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
மேலும், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Prime Minister Narendra Modi on Wednesday expressed grief over the loss of lives in a wall collapse incident in Bengaluru, Karnataka, that claimed the lives of seven people, including three children.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.