சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் மீது வழக்கு
சென்னை தண்டையாா்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
சென்னை: சென்னை தண்டையாா்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தண்டையாா்பேட்டை அன்னை சத்யாநகரைச் சோ்ந்தவா் பு.வெங்கடேசன் (35). இவருக்கு திருமணமாகி, மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். இந்நிலையில் வெங்கடேசன், அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோா், அவரை கண்டித்துள்ளனா். இதன் விளைவாக அந்த சிறுமி, கடந்த வாரம் வீட்டை வெளியே வெளியேறியுள்ளாா். இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா், தங்களது மகளை கண்டுபிடித்து மீட்டுத் தருமாறு வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன் அடிப்படையில் காணாமல் போன சிறுமியை சில நாள்களுக்கு முன்பு போலீஸாா் மீட்டனா். அவரிடம் நடத்திய விசாரணையில், வெங்கடேசன் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போலீஸாா், வெங்கடேசன் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் இந்த வழக்குத் தொடா்பாக வெங்கடேசனை தேடி வருகின்றனா்.