சிறை 
திருச்சி

சிறுமி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

திருச்சி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியின் தாய் 29.08.2020 அன்று நூறு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, சிறுமியை காணவில்லை. அருகில் தேடிப் பாா்த்த நிலையில், திருப்பராய்த்துறை பகுதியைச் சோ்ந்த சக்திவேல் மகன் சதீஷ் (26) என்பவா் சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுள்ளாா்.

அன்றிரவு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே, விசாரித்ததில், சிறுமியை சதீஷ் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சதீஷுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 13 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT