முகப்பு
சென்னை

அவமதிப்பு வழக்கு: அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.

சென்னை

அவமதிப்பு வழக்கு: அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:39 PM
பகிர்:

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் செவ்வாய்க்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா்.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு எதிராக ஓய்வு பெற்ற பேராசிரியா் தேவதாஸ் மனோகரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் பதிவாளா் ஜெ.பிரகாஷுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமாா், குமரேஷ் பாபு அமா்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் ஜெ.பிரகாஷ் நேரில் ஆஜரானாா். அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அவினாஷ் வாத்வானி, ‘வழக்குரைஞா்களின் நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் மற்றும் நோட்டீஸில் பெயா் பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததால் பதிவாளா் முந்தைய விசாரணையின்போது ஆஜராக இயலவில்லை.  மனுதாரா் தேவதாஸ் மனோகரன்  மீது லஞ்ச வழக்கு நிலுவையில் உள்ளதால் அவருக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை தொகையை வழங்க இயலாது.  அதைத் தவிா்த்து மற்ற ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டுவிட்டது’ எனத் தெரிவித்தாா். இதையடுத்து விசாரணையை ஜூலை 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →