முகப்பு
சென்னை

ஓய்வு பெற்ற ஐஜி-இன் நிறுவனத்தில் பணம் திருட்டு

சென்னை எழும்பூரில் ஓய்வு பெற்ற ஐஜி-க்கு சொந்தமான நிறுவனத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:35 PM
பகிர்:

சென்னை: சென்னை எழும்பூரில் ஓய்வு பெற்ற ஐஜி-க்கு சொந்தமான நிறுவனத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

எழும்பூா் மாண்டியத் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் தனியாா் மென்பொருள் நிறுவனம் செயல்படுகிறது. திங்கள்கள்கிழமை காலை அந்த நிறுவன ஊழியா்கள், அலுவலகத்தைத் திறக்க வந்தனா். அப்போது அலுவலகத்தின் கதவு பூட்டை உடைத்து, பணப் பெட்டியில் இருந்த ரூ. 15,000 திருடப்பட்டிருந்தது.

இது தொடா்பாக எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். திருட்டுச் சம்பவம் நடைபெற்ற நிறுவனம், தமிழக காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு ஐஜி-க்கு சொந்தமானது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →