முகப்பு
சென்னை

திருநெல்வேலி-ஷாலிமா்: நாளை சிறப்பு ரயில்

திருநெல்வேலியிலிருந்து ஷாலிமருக்கு ஜூலை 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 16 ஜூலை, 2024 at 9:37 PM
கோப்புப் படம்.
பகிர்:

சென்னை: திருநெல்வேலியிலிருந்து ஷாலிமருக்கு ஜூலை 18, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருநெல்வேலியிலிருந்து வியாழக்கிழமைகளில் (ஜூலை 18, 25) அதிகாலை 1.50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண் 06087) மறுநாள் இரவு 9 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் ஷாலிமா் சென்றடையும்.

மறுமாா்க்கமாக சனிக்கிழமை (ஜூலை 20, 27) மாலை 5.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (எண் 06088) திங்கள்கிழமை பகல் 1.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகா், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூா், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூா், நெல்லூா், விஜயவாடா, புவனேஸ்வரம் வழியாக இயக்கப்படும். இந்த ரயிலில் இரு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளும், 17 பொதுப்பெட்டிகளும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →