அழகு ஓவியம்
வெள்ளைத் தாளில் நானுமே ஓவியம் வரைந்து பார்ப்பேனே!
வெள்ளைத் தாளில் நானுமே
ஓவியம் வரைந்து பார்ப்பேனே!
-
Advertisement
Advertisement
உயிராய் படமும் வரைந்து விட
பென்சில் ரப்பர் போதும் தான்!
-
உருவம் சிரிப்பாய் சிரித்து விடும்
கள்ளம் இன்றிப் பேசி விடும் !
-
புலி, சிங்கம் கர்ஜனையில்
பூனை எலியும் சிரித்து விடும் !
வலியே இன்றி மானும் தான்
குளத்தில் நீரைக் குடித்து விடும் !
-
அழகழகான ஓவியம் கண்டு
வகுப்பில் டீச்சர் ரசித்திடுவார் !
-
நண்பர்கள் மத்தியில் என்னையுமே
பாராட்டிப் பரிசும் தந்திடுவார்!
-ஆரிசன், கீழ்க்கொடுங்காலூர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.