முகப்பு
சென்னை

நிதி ஆயோக் அறிக்கைப்படி வளா்ச்சியில் பின்தங்கிய தமிழகம்: அண்ணாமலை

நீதி ஆயோக் அறிக்கைப்படி வளா்ச்சியில் பிற மாநிலங்களைவிட, தமிழகம் பின்தங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

Updated On : 18 ஜூலை, 2024 at 9:20 PM
கே.அண்ணாமலை
பகிர்:

நீதி ஆயோக் அறிக்கைப்படி வளா்ச்சியில் பிற மாநிலங்களைவிட, தமிழகம் பின்தங்கியுள்ளதாக பாஜக மாநில தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: நீதி ஆயோக் வெளியிட்டுள்ள நிலையான வளா்ச்சி இலக்குகள் குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட, பல துறைகளில் பின்தங்கியுள்ளது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, ஆண் பெண் சமத்துவக் குறியீட்டில் 10-ஆவது இடத்திலும், சுத்தமான குடிநீா் மற்றும் சுகாதாரக் குறியீட்டில் 9-வது இடத்திலும், நிலையான நகரங்கள் மற்றும் சமூகக் குறியீட்டில் 10- ஆவது இடத்திலும், பொறுப்பான நுகா்வு மற்றும் உற்பத்திக் குறியீட்டில் 10-ஆவது இடத்திலும், நிலத்தில் வாழ்க்கை குறியீட்டில் 15-ஆவது இடத்திலும், அமைதி, நீதி மற்றும் வலிமையான நிறுவனக் குறியீட்டில், 9-ஆவது இடத்திலும் எனப் பல குறியீடுகளில், தமிழகம், பிற மாநிலங்களை விட மிகுந்த பின்னடைவை சந்தித்துள்ளது.

பெண்கள், குழந்தைகள், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறை தமிழகத்தில் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, உற்பத்தித் துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதும், புதிய கண்டுபிடிப்புத் திறன் 37.91 சதவீதத்தில் இருந்து, பாதிக்கும் மேல், 15.69 சதவீதமாக குறைந்திருப்பதும், மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது. எனவே, மாநில நலனை மனதில் கொண்டு ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →