முகப்பு
வணிகம்

விடைபெறும் டீசல் வாகனங்கள்!

நாட்டின் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை 2070-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு, போக்குவரத்துத் துறையில் அதிரடி மாற்றங்கள் அவசியம் என நீதி ஆயோக் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Updated On : 21 பிப்ரவரி 2026, 2:43 am IST
கோப்புப் படம்
பகிர்:

நாட்டின் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை 2070-ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்கு, போக்குவரத்துத் துறையில் அதிரடி மாற்றங்கள் அவசியம் என நீதி ஆயோக் தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் டீசல் வாகனங்களின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்து, அதற்கு மாற்றாக சிஎன்ஜி, ஹைப்ரிட் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்தப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தற்போது 76 சதவீதமாக உள்ள பெட்ரோல் பயன்பாடு, 2070-இல் 29 சதவீதமாகக் குறையும். மின்சாரப் பயன்பாடு 45 சதவீதமாகவும், உயிரி எரிபொருளின் பயன்பாடு 20 சதவீதமாகவும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் பயன்பாடு 90 சதவீதம் வரை அதிகரிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த இலக்குகளை அடைய, வாகனத் திறனுக்கான ‘கஃபே’ தரநிலைகளை கடுமையாக்குதல் மற்றும் பழைய வணிக வாகனங்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவுள்ளது. மேலும், பேருந்து, ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை மேலும் நவீனப்படுத்தி மேம்படுத்தவும் நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.