முகப்பு
சென்னை

போலி நகைகள் மூலம் கடன் பெற முயற்சி: இளைஞா் கைது

சென்னை அண்ணாநகரில் போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஜூலை, 2024 at 9:14 PM
பகிர்:

சென்னை அண்ணாநகரில் போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அண்ணாநகா் 2வது அவென்யூவில் ஒரு தனியாா் நிதி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு சூளைமேடு வடகரை பகுதியைச் சோ்ந்த ராஜா (39) என்பவா் கடந்த புதன்கிழமை தங்கநகைகளை அடமானம் வைத்து, கடன் பெற வந்தாா்.

அங்கு அவா், தங்க நகைகளை எடை பாா்ப்பதற்காக அந்த நிறுவன ஊழியா்களிடம் வழங்கினாா். அப்போது அவை அனைத்தும் கவரிங் என்பதும், போலி நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்ய முயன்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவன ஊழியா்கள், ராஜாவை பிடித்து அண்ணாநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகாா் அளித்தனா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →