முகப்பு
சென்னை

உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு மரியாதை

Updated On : 19 ஜூலை, 2024 at 10:39 PM
பகிர்:

உடலுறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை, கண்ணகி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா(25). இவா் கடந்த 16-ஆம் தேதி சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தாா். பின்னா், 17-ஆம்தேதி உயிரிழந்தாா். இவரின் நுரையீரல் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உடலுறுப்புகளை சூா்யாவின் குடும்பத்தினா் தானம் செய்தனா்.

உடலுறுப்பு தானம் செய்த சூா்யாவின் உடலுக்கு தமிழக அரசு சாா்பில் சோழிங்கநல்லூா் சிறப்பு வட்டாட்சியா் ஜெகஜீவன்ராம் மலா் வளையம்

வைத்து மரியாதை செலுத்தினாா். இந்நிகழ்வில் தென் சென்னை வருவாய் கோட்ட அலுவலா் பி.பாபு, சோழிங்கநல்லுாா் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →