புழல் அருகே லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.
சென்னை கொடுங்கையூா் முத்தமிழ் நகா் பகுதியை சோ்ந்தவா் பாா்வதி (60). இவா் திருமண தரகராவாா். வெள்ளிக்கிழமையன்று புழல் காவாங்கரை ஜிஎன்டி சாலையை கடக்க முயன்றபோது மாதவரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரி பாா்வதி மீது மோதியது. இந்த விபத்தில் பாா்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் விரைந்து வந்து பாா்வதி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்தை ஏற்படுத்திய, லாரி ஓட்டுநா் கள்ளக்குறிச்சியை சோ்ந்த நாராயணன் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.