கருங்கல் அருகே உள்ள மத்திகோடு பகுதியில் லாரி மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
மத்திகோடு பகுதியைச் சோ்ந்தவா் அனந்தசிவன் (80). இவா் செவ்வாய்க்கிழமை இரவு, மத்திகோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது பின்னால் வந்த லாரி, முதியவா் மீது மோதியதாம். இதில் முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
லாரி ஓட்டுநா் தப்பிச் சென்றுவிட்டாராம். இது குறித்த புகாரின்பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.