துரை. ரவிக்குமாா்  
சென்னை

அரசுப் பணியில் எஸ்.சி. பிரிவினரின் பதவி உயா்வை உறுதி செய்ய வேண்டும்: து.ரவிக்குமாா் எம்.பி.

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த அதிகாரிகளின் பதவி உயா்வை உறுதி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Din

சென்னை, ஜூலை 25: அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த அதிகாரிகளின் பதவி உயா்வை உறுதி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலா் து.ரவிக்குமாா் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பதவி உயா்வில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு தமிழக அரசு கடைப்பிடித்துவந்த ரோஸ்டா் முறையை எதிா்த்து ஓபிசி பிரிவைச் சோ்ந்த ஒருவா் உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளிக்கப்பட்ட உத்தரவைக் காரணமாகக் காட்டி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த அரசு அதிகாரிகளின் பதவி உயா்வைப் பறித்து, அவா்களை தமிழக அரசு கீழிறக்கம் செய்கிறது. இதைத் தடுப்பதற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ளதைப்போல சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் எனக் கடந்த ஆண்டு அமைச்சா் கயல்விழியிடம் மனு அளித்தேன்.

முதல்வா் மற்றும் தமிழக அரசின் உயரதிகாரிகளின் கவனத்துக்கும் எடுத்துச் சென்றோம். இப்போதுகூட வேளாண் துறையில் 39 துணை இயக்குநா்கள் பதவி இறக்கம் செய்யப்படுகின்றனா் என்றும் அதில் 37 போ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் என்றும் அறிகிறேன். இப்படியே போனால் இனிமேல் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் கூட உயா் பதவிக்கு வர முடியாது. இதைத் தமிழக அரசு தடுக்க முடியாதா என்று து.ரவிக்குமாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

6 ஓவர்களில் 5 விக்கெட்டுகள்; பென் ஸ்டோக்ஸ் அபார பந்துவீச்சு!

மணிப்பூரில் தொடரும் டெங்கு பரவல்! 5,166 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் பாம்பு விஷம் கடத்திய கும்பல் பிடிபட்டது: ரூ.80 கோடி விஷம் பறிமுதல்

SCROLL FOR NEXT