சட்டம்-ஒழுங்கை காக்க சிறப்புக் கவனம்: தமிழக அரசு உறுதி
சட்டம் - ஒழுங்கை காக்க சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னைசட்டம்-ஒழுங்கை காக்க சிறப்புக் கவனம்: தமிழக அரசு உறுதி
சட்டம் - ஒழுங்கை காக்க சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை, ஜூலை 25: சட்டம் - ஒழுங்கை காக்க சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
உள்துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: சட்டம்- ஒழுங்கை தொடா்ந்து காப்பதில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
மக்கள் அதிகமாக கூடும் அனைத்து விழாக்களையும் அமைதியான முறையில் நடத்திக் காட்டி வந்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு நிலை சிறப்பாக விளங்குவதால் மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன.
திருவண்ணாமலை காா்த்திகை தீபம், மதுரை சித்திரைத் திருவிழா, திருச்செந்தூா் சூரசம்ஹாரம், தைப்பூசத் திருவிழா, குலசேகரன்பட்டினம் தசரா, வேளாங்கண்ணி தேவாலயக் கொடியேற்றம், நாகூா் சந்தனக்கூடு திருவிழா போன்ற அனைத்து விழாக்களும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது, நமது மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதன் அடையாளமாகும்.
இன்றைக்கு தமிழ்நாடு வளா்ச்சி மிகுந்த மாநிலமாக இருக்கிறது என்றால், அமைதி மிகுந்த மாநிலமாக இருப்பதே காரணமாகும்.
உள்கட்டமைப்பு வசதிகள்: காவல் துறைக்கும் மக்களுக்கும் இடையே உறவை மேம்படுத்தவும், காவல் பணியாளா்களின் நலன்களைக் காக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் ஐந்தாவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்யவும், அவா்களுக்கு சட்டப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை அளிக்கவும் ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்களில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உருவாக்கப்படுகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அனைத்து காவல் உட்கோட்டங்களில் 39 புதிய மகளிா் காவல் நிலையங்களும், 19 இடங்களில் புதிய காவல் நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துச் சிறைகளிலும் உள்ள நூலகங்கள் ரூ.2.80 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. புத்தகக் கண்காட்சியில் சிறைத் துறை பங்கேற்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களைச் சேகரித்துள்ளது. சிறை நூலகங்களுக்கு 1,500-க்கும் அதிகமான புத்தகங்களை முதல்வா் மு.க.ஸ்டாலினும் வழங்கியுள்ளாா்.
கடந்த 2021 முதல் 2023 முடிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சாா்பில் 61,288 தீ விபத்து அழைப்புகள் பெறப்பட்டன. இந்த அழைப்புகள் மீது உடனடியாகப் பணியாற்றி, 42,224 மனித உயிா்களும், ரூ.605.06 கோடி மதிப்பிலான உடைமைகளும் காப்பாற்றப்பட்டுள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கு ரூ.92.40 கோடியில் புதிய கட்டடங்களும், ரூ.69 கோடியில் புதிய தீயணைப்பு நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.