முகப்பு
தமிழ்நாடு

மறதி நோயைத் தடுக்க... தமிழக அரசு எடுத்த புதிய முன்னெடுப்பு!

மறதி நோய் சிகிச்சைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:35 PM
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம். - படம்: DIPR
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:17 PM

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் மறதி நோயை குணப்படுத்துவதற்கும், தடுப்பதற்கும் மற்றும் சிகிச்சைக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று(பிப். 18) கையெழுத்தானது.

Updated On : 18 பிப்ரவரி, 2026 at 3:21 PM

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் இன்று (பிப். 18) சென்னை, தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தன்னார்வ அமைப்பான Demantia India Alliance நிறுவனம் இணைந்து 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மறதி நோய்க்கு ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சைகள் வழங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார் மற்றும் Demantia India Alliance நிறுவன தலைவர் மரு.ராதாமூர்த்தி அவர்களுக்கிடைய கையெழுத்தானது.

Advertisement

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு வரும் மறதி நோய் உள்ளவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிதல், மறதிநோய்க்கான மருத்துவ உதவி, மறதி நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றுதல், மறதி நோய் உள்ளவர்களை பராமரிப்பதற்கான பயிற்சி (மருத்துவம் சார்ந்த ஊழியர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள்), குடும்ப உறுப்பினர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான உதவி, பராமரிப்பு மையங்கள் அமைத்தல், மறதி நோய் பற்றிய ஆராய்ச்சி இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதற்கான ஒருங்கிணைப்பு மையமாக தேசிய முதியோர் நல மருத்துவ மையம் செயல்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

A Memorandum of Understanding was signed to raise awareness about the treatment, prevention and cure of dementia in people over the age of 60.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.