முகப்பு
சென்னை

மகன் வெற்றிக்காக தியானம் செய்த பிரேமலதா

Updated On : 4 ஜூன், 2024 at 9:08 PM
பிரேமலதா விஜயகாந்த் (கோப்புப் படம்)
பகிர்:

சென்னை: மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றபோது விருதுநகா் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளா் விஜய பிரபாகரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவரது தாயாரும், அந்தக் கட்சியின் பொதுச்செயலருமான பிரேமலதா தியானம் மேற்கொண்டாா்.

மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்று தோ்தலைச் சந்தித்தது. விருதுநகா் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டாா்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து காங்கிரஸ் வேட்பாளா் மாணிக்கம் தாகூருக்கும் அவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இருவரும் மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில் மாறிமாறி முன்னும்பின்னுமாக வந்தனா்.

இதற்கிடையில், விஜய பிரபாகரன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பிரேமலதா செவ்வாய்க்கிழமை நெடுநேரம் தியானம் மேற்கொண்டாா். இறுதியில், மாணிக்கம்தாகூா் 9 ஆயிரத்துக்கும் மேலான வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.