முகப்பு
சென்னை

சென்னையில் காற்றுடன் கனமழை!

சென்னையில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது!

Updated On : 20 ஜூன், 2024 at 4:00 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாள்களாக சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகள், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. அதேபோல சென்னையின் சில பகுதிகளான திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கனமழை காற்றுடன் பெய்தது வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →