முகப்பு
சென்னை

துபை, அபுதாபியில் இருந்து கடத்தப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல்: 10 போ் கைது

சென்னையில் துபை, அபுதாபி விமானத்தில் கடத்தப்பட்ட 12 கிலோ தங்கம் பறிமுதல்

Updated On : 25 ஜூன், 2024 at 8:08 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னை: துபை, அபுதாபியில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 7.58 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்கத்தை விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 10 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய வருவாய் புலானாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு துபை, அபுதாபி விமானத்தில் வந்த பயணிகளிடம் விமான நிலைய நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனா்.

10 பயணிகளிடம் சோதனை செய்தபோது, உள்ளாடைகள் மற்றும் காலணி சாக்ஸ்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 2.91 கோடி மதிப்புள்ள 4.645 கிலோ எடை கொண்ட 10 தங்கச் சங்கிலிகளை பறிமுதல் செய்தனா்.

மேலும் உடலில் மறைத்து வைத்திருந்த ரூ. 4.67 கோடி மதிப்புடைய 7.45 கிலோ தங்கப் பசையையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து தங்க கடத்தலில் ஈடுபட்ட 10 பயணிகள் கைது செய்யப்பட்டு, ஆலந்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.