கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு: சிபிஐ விசாரணை தேவை: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் மனு
சென்னைகள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு: சிபிஐ விசாரணை தேவை: ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி மனு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: சிபிஐ விசாரணை கோரி எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் மனு
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி ஆளுநரிடம் அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை மனு அளித்தார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்தால் நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்காது.
கள்ளச் சாராய வியாபாரிகளுடன் காவல் துறைக்கு தொடர்பு இருப்பதால், மக்கள் ஏதாவது தகவல் தெரிவித்தால் அது உடனடியாக கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு சென்றுவிடுகிறது. அந்த அச்சத்தில் தான் கள்ளச்சாராய விற்பனை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க மக்கள் அஞ்சுகின்றனர். மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையில் எந்த கட்சியினர் ஈடுபட்டாலும் அவர்களை கைது செய்ய வேண்டும்.
மேலும் கள்ளச் சாராய உயிரிழப்பு குறித்து நியாயமான} நேர்மையான விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்புலத்தில் உள்ளவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவர வேண்டும் என்றால் வழக்கு சிபிஐ விசாரிக்க வேண்டும்.
அதற்கு ஆளுநர் பரிந்துரை செய்ய வலியுறுத்தி அவரிடம் மனு கொடுத்தோம். அவரும் அந்த மனுவைத் தீர ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார் அவர்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவியை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்த அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி.