முகப்பு
இந்தியா

தில்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!

தில்லியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு...

Updated On : 2 மார்ச், 2026 at 10:17 PM
அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி - Center-Center-Chennai
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 10:01 PM

புது தில்லி : அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 2) தில்லி சென்ற நிலையில், அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அதிமுக தொகுதிப் பங்கீட்டில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

Updated On : 2 மார்ச், 2026 at 10:08 PM

முன்னதாக நேற்று மதுரையில் தேஜ கூட்டணி தலைவர்கள் சுமார் 30 நிமிடங்கள் வரை ஆலோசனையில் ஈடுபட்டதில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி இன்று தில்லியில் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

Advertisement

summary

Edappadi Palaniswami meets Amit Shah in Delhi!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.