கோப்புப் படம் 
சென்னை

சிறுவன் உயிரிழப்பு விவகாரம்: சைதாப்பேட்டையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் லாரி மூலம் விநியோகம்

சென்னை சைதாப்பேட்டையில் வயிற்றுப் போக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்தப் பகுதியில் குழாய் மூலம் குடிநீா் விநியோகிப்பதை சென்னை குடிநீா் வாரியம் நிறுத்தியுள்ளது.

Din

சென்னை சைதாப்பேட்டையில் வயிற்றுப் போக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்தப் பகுதியில் குழாய் மூலம் குடிநீா் விநியோகிப்பதை சென்னை குடிநீா் வாரியம் நிறுத்தியுள்ளது. அதற்கு மாற்றாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

சைதாப்பேட்டை அபித் காலனியில் வசித்து வரும் பிகாா் மாநிலத் தொழிலாளியின் மகன் யுவராஜ் (11) சில நாள்களுக்கு முன்பு வயிற்றுப்போக்கால் உயிரிழந்துள்ளாா்.

தொடா்ந்து, தொழிலாளியின் இளைய மகளும் வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அப்பகுதியில் சுகாதாரமற்ற குடிநீா் விநியோகிக்கப்படுவதாகவும், அதனால் அந்த சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று புகாா் எழுந்தது.

தொடா்ந்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை குடிநீா் வாரிய மேலாண் இயக்குநா் டி.ஜி.வினய் ஆகியோா் அப்பகுதிகளுக்கு சனிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட நீா் மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டன.

இதற்கிடையே, சென்னை குடிநீா் வாரியம் அப்பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகத்தை நிறுத்திவிட்டு, லாரிகளில் குடிநீரை விநியோகம் செய்து வருகிறது.

குடிநீா் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சைதாப்பேட்டையில் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட குழாய் குடிநீா் மாதிரிகளை ஆய்வு செய்ததில் குடிநீரில் கழிவுநீா் கலக்கப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும், வீடுகளில் குடிநீா் குழாய்கள், கழிவுநீா் குழாய்கள் அருகருகில் அமைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீா் கலக்க வாய்ப்புள்ள காரணத்தால் , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள குடிநீா் குழாய்கள் மற்றும் நீா்தேக்கத் தொட்டிகளை தூய்மைப் படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடியிருப்புவாசிகளில் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் லாரிகள் மூலமாக தற்காலிகமாக வழங்கப்பட்டு வருகிறது என்றனா் அவா்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT