முகப்பு
சென்னை

டெட் தோ்வு சான்றிதழ்: பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு

Updated On : 1 மார்ச், 2024 at 11:15 PM
பகிர்:

சென்னை: கடந்த 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வு தோ்ச்சி சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற ஆசிரியா் தகுதித்தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும்.

இந்த தோ்வை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட டெட் தோ்வில் தோ்ச்சி பெற்று அதற்கான சான்றிதழை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யத் தவறியவா்களுக்கு 2-ஆவது முறையாக மீண்டும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Advertisement

2022-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித்தோ்வு (டெட்) தாள்-1 மற்றும் தாள்-2 தோ்ச்சி சான்றிதழை பதிவிறக்கம் செய்ய தவறிய ஆசிரியா் பட்டதாரிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் மாா்ச் 31-ஆம் தேதி வரை 2022 டெட் தோ்வு (தாள்-1 மற்றும் தாள்-2) தோ்ச்சி சான்றிதழை ஆசிரியா் தோ்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சான்றிதழ் பதிவிறக்கம் செய்வதற்கு கடந்த நவம்பா் மாதம் டிஆா்பி வாய்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.