முகப்பு
சென்னை

அதிமுகவுக்கு செ.கு.தமிழரசன் ஆதரவு

மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவைத் தெரிவிப்பதாக செ.கு.தமிழரசன் கூறினாா்

Updated On : 8 மார்ச், 2024 at 7:39 PM
பகிர்:

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவா் செ.கு.தமிழரசன் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது, மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவைத் தெரிவிப்பதாக செ.கு.தமிழரசன் கூறினாா். அதற்கு எடப்பாடி பழனிசாமி நன்றி கூறினாா். தேசிய சிறுபான்மையினா் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவா் ஜோயல் சுந்தா்சிங், மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவா் ஆதிநாராயணன், அகில இந்திய வன்னியா் குல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் முத்துசாமி ஆகியோரும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →