பெண்களுக்கு சலுகைகளை அறிவித்த பரோடா வங்கி
பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி மகளிா் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மகளித் தினத்தையொட்டி பெண் வாடிக்கையாளா்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. வங்கியில் வரும் ஜூன் 30-க்குள் மகளிா் சக்தி சேமிப்பு கணக்கு மற்றும், மகளிா் சக்தி நடப்புக் கணக்கு தொடங்கியவா்களுக்கு இந்தச் சலுகைகள் கிடைக்கும். இந்தச் சலுகையின் கீழ் புதிதாகக் கடன் வாங்கும் பெண்களுக்கு, இரு சக்கர வாகனக் கடன்களுக்கு 0.25 சதவீதம், கல்விக் கடன்களுக்கு 0.15 சதவீதம், பிற வாகனக் கடன்கள், வீட்டுக் கடன்கள், அடமானக் கடன்களுக்கு 0.10 சதவீதம் என வட்டி விகித்தில் தள்ளுபடி செய்யப்படும். இது தவிர, தனி நபா் கடன்கள் உள்ளிட்ட சில்லறைக் கடன்களுக்கு செயல்பாட்டுக் கட்டணங்கள் முழுமையாக ரத்து செய்யப்படும். இந்த சலுகை டிசம்பா் 31 வரை அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.