FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மத்திய கிழக்கில் போர் எதிரொலி: கரடியின் தொடர் பிடியில் சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் சரிந்து 78,918.90 ஆகவும், நிஃப்டி 315.45 புள்ளிகள் சரிந்து 24,450.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

Updated On : 6 மார்ச் 2026, 6:13 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் தொடர்ந்து ஏழாவது நாளாக சூழ்ந்ததால், இந்திய குறியீடுகள் முந்தைய அமர்வின் வேகத்தைத் தக்கவைக்கத் தவறிவிட்டன. இதனையடுத்து, பங்குச் சந்தை அளவுகோல் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று 1 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. குறிப்பாக நிதி மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தத்தின் மத்தியில் நிஃப்டி 24,450 ஆக முடிவடைந்தன.

அமெரிக்க பங்குகளில் ஏற்பட்ட பலவீனம், ஐரோப்பிய சந்தைகளில் மந்தமான போக்கு மற்றும் இடைவிடாத வெளியேறி வரும் வெளிநாட்டு நிதி உள்ளிட்டவை முதலீட்டாளர்களை வெகுவாக பீதியடைய வைத்தது.

இன்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் 1,203.72 புள்ளிகள் சரிந்து 78,812.18 புள்ளிகளாக தொடர்ந்தது. வர்த்தக முடிவில் 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 1,097 புள்ளிகள் சரிந்து 78,918.90 ஆகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 315.45 புள்ளிகள் சரிந்து 24,450.45 புள்ளிகளாக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.7 சதவீதம் மற்றும் ஸ்மால் கேப் குறியீடு 0.2 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தன. இந்த வாரத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 3 சதவீதம் வரை சரிந்தன.

சென்செக்ஸில் எடர்னல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், எச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, என்டிபிசி, இன்ஃபோசிஸ் மற்றும் எச்சிஎல் டெக் ஆகியவை பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் ஐசிஐசிஐ வங்கி, எடர்னல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் பாரத் எலக்ட்ரானிக்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஓஎன்ஜிசி மற்றும் சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

துறை ரிதியாக ஆட்டோ, ரியால்டி, பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் வங்கி குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிந்தன. மறுபுறம் பாதுகாப்பு குறியீடு கிட்டத்தட்ட 3 சதவீதம் உயர்ந்தன. அதே நேரத்தில் கேபிடல் குட்ஸ் குறியீடு 1.3 சதவீதமும் மற்றும் பவர் குறியீடு 0.4 சதவீதம் உயர்ந்தன.

அதிகரித்து வரும் அமெரிக்க-ஈரான் பதற்றங்கள், மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை சீர்குலைத்து, கச்சா எண்ணெய் விலையை வெகுவாக உயர்ந்ததால், இந்திய பங்குச் சந்தையில் சரிவு நீடித்தது. மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்களை வெகுவாக நிலைகுலைய செய்துவிடும் நிலையில், இந்தியாவின் பற்றாக்குறை மற்றும் பணவீக்கப் பாதை நிலைப்பாட்டையும் பாதிக்கும்.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.3,752.52 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.5,153.37 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

பங்குச் சந்தையில், குஜராத் உர்ஜா விகாஸ் நிகாமுடன் ஒப்பந்தம் கையெழுத்தானதால் ராஜேஷ் பவர் பங்கு விலை 1.5% உயர்ந்தன. ஐசிஐசிஐ வங்கி 10.2 லட்சம் பங்குகளை மொத்தமாக ஒப்பந்தம் செய்ததால் அதன் பங்குகள் 3% சரிந்தன. ரஷ்ய எண்ணெயை வாங்க அமெரிக்கா 30 நாள் தள்ளுபடி செய்ததில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 1% உயர்ந்தன.

சொனாட்டா மென்பொருள், ப்ராக்டர் அண்ட் கேம்பிள் ஹைஜீன் அண்ட் ஹெல்த் கேர், பெர்கர் பெயிண்ட்ஸ், அல்கைல் அமின்ஸ், சையண்ட் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று 52 வார குறைந்த அளவை எட்டியது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங் ஹேங் செங் குறியீடும் உயர்ந்து முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் சரிந்த நிலையில், அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (வியாழக்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய், பீப்பாய்க்கு 2.53 சதவீதம் உயர்ந்து 87.57 அமெரிக்க டாலர்களாக உள்ளது.

summary

Stock market benchmark indices Sensex and Nifty tumbled over 1 per cent on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments