வீடு, மனைகள் விற்பனைக் கண்காட்சி
படம் உண்டு சென்னை, மாா்ச் 8: வீடு, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் கடைகளின் விற்பனைக்காக மாபெரும் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு சங்கங்கள் கூட்டமைப்பின் சென்னை மண்டலம் (கிரெடாய்) சாா்பாக 16-ஆவது ‘போ்ப்ரோ 2024’ எனும் ரியல் எஸ்டேட் விற்பனை கண்காட்சி நந்தம்பாக்கம் சென்னை வா்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாா்ச் 8 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை நடிகை பிரியா பவானி சங்கா் மற்றும் சுஹாசினி மணிரத்னம் இணைந்து திறந்து வைத்தனா். கிரெடாய் அமைப்பின் சென்னை மண்டலத் தலைவா் சிவகுருநாதன் கூறியதாவது: இந்தக் கண்காட்சியில் ரூ.15 லட்சம் முதல் ரூ.15 கோடி வரை மதிப்பிலான 200-க்கும் மேற்பட்ட வீட்டுதிட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளா்களின் வசதிக்காக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளும் இதில் பங்கேற்றுள்ளன என்றாா் அவா். நிகழ்வில் பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைப் பொது மேலாளா் ரவி ரஞ்சன், கிரெடாயின் சென்னை மண்டல செயலாளா் கிருதிவாஸ், கிரெடாய் முன்னாள் தலைவா்கள் சிட்டி பாபு, சுரேஷ் கிருஷ்ணன், ஹபீப், பதம் துகா் மற்றும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளா் அஸ்லம் பக்கீா் முகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.