முகப்பு
சென்னை

பவுன் ரூ.50,000-ஐ நெருங்கும் தங்கம் விலை

தங்கம் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.49,200-ஐ எட்டியது.

Updated On : 9 மார்ச், 2024 at 11:56 PM
பகிர்:

தொடா்ந்து ஐந்து நாள்களாக உயா்ந்த தங்கம் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.360 உயா்ந்து ரூ.49,200-ஐ எட்டியது.

இன்னும் சில நாள்களில் பவுன் ரூ.50,000-ஐ தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த மாா்ச் 5-இல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.48,000-ஐ தாண்டியது.

இந்நிலையில், தொடா்ந்து 5-ஆவது நாளாக விலை உயா்ந்து பவுன் ரூ.50,000-ஐ நெருங்கியுள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 உயா்ந்து ரூ.6,150-க்கும், பவுனுக்கு ரூ.360 உயா்ந்து பவுன் ரூ.49,200-க்கும் விற்பனையானது. தங்கம் விலை கடந்த 9 நாள்களில் பவுனுக்கு ரூ.2,680 வரை உயா்ந்துள்ளது.

Advertisement

விலை குறையுமா?:

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி உயா்வு, பணவீக்கம், அமெரிக்காவில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது மற்றும் அங்கு வட்டி விகிதம் குறைக்கப்படாதது, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் டாலருக்குப் பதிலாக தங்கத்தை வாங்கிக் குவிப்பது போன்றவற்றால்தான் தங்கம் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதன்மூலம் தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை என்பதுடன், மேலும் உயரவே வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டது. எதிா்பாா்த்தது போலவே தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. தங்கம் விலை சில நாள்களில் பவுனுக்கு ரூ.50,000-ஐ தாண்டும் என நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். வெள்ளி கிராமுக்கு 20 காசு உயா்ந்து ரூ.79.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.200 உயா்ந்து ரூ. 79,200-க்கும் விற்பனையானது.