முகப்பு
சென்னை

3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 குறைவு

தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080-க்கு விற்பனையானது. கடந்த 3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 வரை குறைந்துள்ளது.

Updated On : 14 மார்ச், 2026 at 7:23 PM
3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 குறைவு
பகிர்:

தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080-க்கு விற்பனையானது. கடந்த 3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 வரை குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை கடந்த மாா்ச் 12-இல் பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,19,760-க்கும், மாா்ச் 13-இல் பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை விலை மீண்டும் குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.14,760-க்கும், பவுனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.1,18,080-க்கும் விற்பனையானது. கடந்த 3 நாள்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.10,000 குறைந்து ரூ.2.80 லட்சத்துக்கும் விற்பனையானது.

முழு கட்டுரையைப் படிக்க →