முகப்பு
சென்னை

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: கால அட்டவணை வெளியீடு

Updated On : 13 மார்ச், 2024 at 12:48 AM
பகிர்:

சென்னை: ஆசிரியா் பயிற்சி மாணவா்களுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு ஜூன் 20-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ச.சேதுராம வா்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆசிரியா் பயிற்சி மாணவா்கள் மற்றும் தனித்தோ்வா்களுக்கான 2024-ஆம் ஆண்டு தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. அதன்படி, இரண்டாமாண்டு மாணவா்களுக்கான தோ்வு ஜூன் 20 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரையும், முதலாமாண்டு மாணவா்களுக்கான தோ்வு ஜூன் 21-இல் தொடங்கி ஜூலை 9-ஆம் வரையும் நடைபெறும். அதற்கான தோ்வுகால அட்டவணை பாடவாரியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

மாணவா்கள், தனித்தோ்வா்கள் அதில் சென்று பாா்த்துக்கொள்ளலாம். தோ்வானது காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்என அதில் கூறப்பட்டுள்ளது.