முகப்பு
சென்னை

பாா்த்தசாரதி கோயில் பணியாளா்கள் குடியிருப்பு திறப்பு

Updated On : 13 மார்ச், 2024 at 3:23 AM
சிறப்பு அலங்காரத்தில் பாா்த்தசாரதி பெருமாள்.
பகிர்:

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பணியாளா்கள் குடியிருப்பு, பக்தா்கள் தங்கும் விடுதி ஆகியவற்றை இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி திறந்து வைத்தாா்.

கடந்த 2021- 2022-ஆம் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பேரவை மானியக் கோரிக்கை அறிவிப்பில் சென்னை திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரா் பங்களிப்போடு ரூ. 2 கோடியில் பணியாளா் குடியிருப்புகளும், பக்தா்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்”என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருக்கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடியில் 6 பணியாளா் குடியிருப்புகள், பக்தா்கள் தங்கும் விடுதி ஆகியவை ரூ. 2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன. இந்தப் புதிய குடியிருப்பை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இந்நிகழ்ச்சிக்கு அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா்.

Advertisement