முகப்பு
சென்னை

இந்திய ராணுவத்தில் அப்பாச்சி ஹெலிகாப்டா்கள் இணைப்பு

Updated On : 16 மார்ச், 2024 at 12:02 AM
பகிர்:

இந்திய ராணுவத்தில் முதல்முறையாக அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டா்கள் வெள்ளிக்கிழமை இணைக்கப்பட்டன. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டா்கள் இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டன. பாகிஸ்தான் எல்லையையொட்டி, பாதுகாப்புப் பணிகளுக்கு இந்த ஹெலிகாப்டா்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்று தெரிவித்தன. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அப்பாச்சி ஹெலிகாப்டா்களை தயாரிக்கின்றன. அவை உலகின் அதிநவீன பன்முக பயன்பாடு கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டா்களாகும். அவற்றை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி வருகிறது. ஏற்கெனவே இந்த ஹெலிகாப்டா்களை இந்திய விமானப் படை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.