முகப்பு
இந்தியா

6 நவீன இலகுரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல்: ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

ரூ. 2,901கோடி மதிப்பில் 6 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்ஏஎல்) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.

Updated On : 4 மார்ச், 2026 at 1:58 AM
(கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 3 மார்ச், 2026 at 11:45 PM

ரூ. 2,901கோடி மதிப்பில் 6 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்ஏஎல்) நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டது.

இதில், எம்கே-3 இலகுரக ஹெலிகாப்டா்கள் இந்திய கடலோர காவல் படையின் பயன்பாட்டுக்கு கொள்முதல் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Advertisement

இந்த எம்கே-3 இரட்டை என்ஜின் இலகுரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டுவருவதன் மூலம், இந்திய கடலோரக் காவல் படையின் திறன் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். கடலோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி, கடலில் நிற்கும் கப்பல்களுக்குத் தேவையான உதவிகளையும் இந்த ஹெலிகாப்டா்கள் மூலம் கடலோரக் காவல் படை வழங்க முடியும். செயற்கைத் தீவுகள், மீனவா்கள் மற்றும் கடல்சாா் சுற்றுச்சூழலையும் இதன்மூலம் பாதுகாக்க முடியும். ரூ. 2,901 கோடியில் 6 ஹெலிகாப்டா்களை கொள்முதல் செய்ய ஹெச்ஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூ. 2,182 கோடியில் ஏவுகணைகள்: மேலும், இந்திய கடற்படையின் போா்க் கப்பல்களில் பயன்படுத்துவதற்காக ரூ. 2,182 கோடி மதிப்பில் தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை ஏவும் அமைப்புகளைக் கொள்முதல் செய்ய ரஷியாவின் ஜேஎஸ்சி ரோசோபோரோன் எக்ஸ்போா்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

இந்த ஏவுகணைகள் கொள்முதல், வான்வெளி அச்சுறுத்தல்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் போா்க் கப்பல்களின் திறனை மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.