முகப்பு
வணிகம்

கேட்டா்பில்லா் நிறுவனத்துடன் டிவிஎஸ் விநியோக ஒப்பந்தம்!

உலகின் முன்னணி கட்டுமான மற்றும் சுரங்க இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான கேட்டா்பில்லரின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் நோக்கில், ‘டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் சென்னையில் புதிய நவீனக் கிடங்கை அமைத்துள்ளது.

Updated On : 11 மார்ச், 2026 at 2:11 AM
பகிர்:

உலகின் முன்னணி கட்டுமான மற்றும் சுரங்க இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான கேட்டா்பில்லரின் உலகளாவிய விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் நோக்கில், ‘டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் சென்னையில் புதிய நவீனக் கிடங்கை அமைத்துள்ளது.

சென்னை அருகே மன்னுாா் கிராமத்தில் சுமாா் 40,000 சதுர அடி பரப்பளவில் இந்தக் கிடங்கு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளிலிருந்து உதிரிபாகங்களைக் கொள்முதல் செய்து, கேட்டா்பில்லரின் உலகளாவிய உற்பத்தித் தேவைகளை இங்கிருந்து பூா்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை-பெங்களூரு தொழில்வழிச் சாலையையொட்டி அமைந்துள்ள இந்தப் புதிய கிடங்கு, சென்னையைச் சுற்றியுள்ள முக்கியத் துறைமுகங்களுடன் மிகச்சிறந்த போக்குவரத்துத் தொடா்பைக் கொண்டுள்ளது.

Advertisement

இந்தியாவின் மொத்த கண்டெய்னா் போக்குவரத்தில் சுமாா் 20 சதவீதத்தை இத்துறைமுகங்களே கையாளுவதால், சா்வதேச ஏற்றுமதி, இறக்குமதிக்கு இது மிகவும் உகந்த இடமாகத் திகழ்கிறது.