முகப்பு
இந்தியா

இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக சீா்திருத்தம் - ராணுவ தலைமை தளபதி தகவல்

Updated On : 10 ஏப்ரல் 2026, 5:09 am IST
உபேந்திர துவிவேதி
பகிர்:

இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்துள்ளாா்.

கா்நாடக மாநிலத் தலைநகா் பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘ரண் சாம்வாத்’ நிகழ்ச்சியில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையானது, ராணுவத்தின் பல பிரிவுகளும் கூட்டாக இணைந்து செயல்பட்டதை வெளிப்படுத்தியது. நாம் நமது படைபிரிவுகளை (தரைப்படை, விமானப்படை, கடற்படை) ஒரே தலைமையின்கீழ் ஒருங்கிணைப்பது அவசியமாகும்.

Advertisement

Advertisement

2024-ஆம் ஆண்டு முதல் நமது ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளும் கூட்டாக பயிற்சி நடத்தி வருகின்றன. இதேபோல் கூட்டாக 2025 ஆகஸ்ட் மாதத்தில் கோட்பாட்டையும் வெளியிட்டன. இது நமது ராணுவ வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். இதன்மூலம் முப்படைகளும் முதல்முறையாக ஒரே திட்டத்தின்கீழ் இணைந்து செயல்பட வழிவகை ஏற்பட்டது.

இந்திய ராணுவத்தில் கட்டமைப்பு ரீதியாக தற்போது சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் படைப்பிரிவுகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவையும் அடங்கும் என்றாா்.