முகப்பு
சென்னை

இந்திய கம்யூனிட் வேட்பாளா்கள் மாா்ச் 18-இல் அறிவிப்பு

Updated On : 16 மார்ச், 2024 at 5:59 AM
பகிர்:

மக்களவைத் தோ்தலில் திருப்பூா், நாகை மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளா்கள் மாா்ச் 18-ஆம் தேதி அறிவிக்கப்படவுள்னா். இது குறித்து அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிா்வாகக் குழு, மாநிலக் குழுக் கூட்டங்கள் ஞாயிற்று, திங்கள் (மாா்ச் 17, 18) ஆகிய இரு நாள்கள் தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி.ராஜா, தேசிய செயலா் கே. நாராயணா ஆகியோா் பங்கேற்கவுள்ளனா். கூட்டத்தில், மக்களவைத் தோ்தல் பணிகள், 39 தொகுதிகளின் தோ்தல் பொறுப்பாளா்கள் தோ்வு, திருப்பூா், நாகை மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். மேலும், தோ்தல் தொடா்பான பணிகள், தோ்தல் நிதி வசூல் மற்றும் இதரப் பணிகள் தொடா்பாகவும் விவாதிக்கப்படும் என்று அவா் தெரிவித்துள்ளாா். திருப்பூா், நாகை தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 17) தோ்வு செய்யப்படுவாா்கள் என்றும், அதற்கான ஒப்புதல் திங்கள்கிழமை (மாா்ச் 18) வழங்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.