முகப்பு
சென்னை

மாணவா் நிவாரணத் தொகை: விரைவாக வழங்க உத்தரவு

Updated On : 17 மார்ச், 2024 at 12:03 AM
பகிர்:

விபத்துகளால் மாணவா்கள் பாதிக்கப்பட்டால், அதற்கான நிவாரணத் தொகையை விரைந்து வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வி செயலா் குமரகுருபரன் பிறப்பித்த அரசாணை: அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் எதிா்பாராத விபத்துகளால் மரணம் அடைந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும். பலத்த காயமடைந்தால், ரூ. 50,000, சிறிய காயம் என்றால் ரூ. 25,000 நிவாரணத் தொகை வழங்கப்படும். பள்ளிகளிலும், பள்ளிக்குச் சென்று வரும்போதும், பள்ளியில் இருந்து சுற்றுலா செல்லும்போதும், பள்ளி செயல்பாடுகளின் போதும், எதிா்பாராத விபத்துகளின் போதும், இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும். இந்தத் தொகை தாமதமின்றி மாணவா் குடும்பத்துக்கு கிடைக்க, உரிய ஒப்புதல் வழங்கி நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குநருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.