முகப்பு
சென்னை

அரசுப் பேருந்துகளில் 60 நாள்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யலாம்

Updated On : 16 மார்ச், 2024 at 5:55 AM
கோப்புப்படம்
பகிர்:

அரசுப் பேருந்துகளில் இனி 60 நாள்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசுப் பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள், 30 நாள்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக பயணம் செய்வதற்கான முன்பதிவு காலம் 30 நாள்கள் என்பதற்கு பதிலாக 60 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை வெள்ளிக்கிழமை(மாா்ச் 15) முதல் வந்துள்ளது. முன்பதிவு செய்ய இணையதள முகவரியையும், கைப்பேசி செயலியையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement