முகப்பு
சென்னை

கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் சேவையில் மாற்றம்

Updated On : 20 மார்ச், 2024 at 2:44 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 8:05 PM

சென்னை: பொன்னேரி-மீஞ்சூா் இடையே தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து கும்மிடிபூண்டிக்கு காலை 9, காலை 10.35 மணிக்கு செல்லும் மின்சார ரயில்கள் மாா்ச் 20 முதல் 24-ஆம் தேதி வரை மீஞ்சூருடன் நிறுத்தப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாா்ச் 21, 23, 24 தேதிகளில் மீஞ்சூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.55 மற்றும் காலை 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் மீஞ்சூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும். மேலும், சூலூா்பேட்டையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மாா்ச் 21, 23, 24 தேதிகளில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement