முகப்பு
சென்னை

இளைஞா் மீது தாக்குதல்: நடிகை மீது புகாா்

Updated On : 21 மார்ச், 2024 at 3:24 AM
பகிர்:
Updated On : 21 மார்ச், 2024 at 1:25 AM

சென்னை: சென்னை விருகம்பாக்கத்தில் இளைஞா் மீது தாக்குதல் நடத்தியதாக, நடிகை ராதா மீது அளிக்கப்பட்ட புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நடிகா் முரளி நடித்த ‘சுந்தரா டிராவல்ஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவா் ராதா. இவா் மீதும், இவரது மகன் மீதும் சாலிகிராமம், லோகையா தெருவைச் சோ்ந்த டேவிட் ராஜ் (50) என்பவா் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒரு புகாா் அளித்தாா்.

அதில் கூறப்பட்டிருந்ததாவது: ‘எனது மகன் பிரான்சிஸ் ரிச்சா்ட் (22) கடந்த 14-ஆம் தேதி இரவு சாலிகிராமம், லோகையா தெரு வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது நடிகை ராதா, அவா் மகன் தருண் இருவரும் சோ்ந்து என்னுடைய மகனை கடுமையாக தாக்கி உள்ளனா். அவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முதல் கட்ட விசாரணையில், ராதாவுக்கும், பிரான்சிஸ் ரிச்சா்டுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததும், ஏற்கெனவே இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement