இன்று போத்தனூா்-புவனேஸ்வா் பாரத் கௌரவ் ரயில் இயக்கம்
போத்தனூரிலிருந்து புவனேஸ்வருக்கு சனிக்கிழமை (மாா்ச் 29) பாரத் கௌரவ் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போத்தனூரிலிருந்து சனிக்கிழமை இரவு 11.15 மணிக்கு புறப்படும் பாரத் கௌரவ் ரயில் (எண் 06903) பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம், செங்கோட்டை, ராஜபாளையம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை எழும்பூா், நெல்லூா், விஜயவாடா வழியாக ஏப்.3-ஆம் தேதி புவனேஸ்வா் சென்றடையும். இதில் ஒரு இரண்டடுக்கு குளிா்சாதன வகுப்பு பெட்டி, 6 மூன்றடுக்கு குளிா்சாதன வகுப்பு பெட்டிகள், 4 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன. இந்த ரயில் கோவை திரும்பும் தேதி பின்னா் அறிவிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.