முகப்பு
கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் போத்தனூரில் நின்று செல்லும்

Updated On : 14 மார்ச், 2026 at 7:57 PM
ரயில்
பகிர்:

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் போத்தனூா் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் நிறுத்தப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் (எண்: 16765) கோவை, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ரயிலானது, போத்தனூா் நிலையத்தில் பரிசோதனை அடிப்படையில் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் வாராந்திர விரைவு ரயில் (எண்: 16766) மாா்ச் 19 முதலும், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர விரைவு ரயில் (எண்: 16765) மாா்ச் 20 முதலும் போத்தனூா் நிலையத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →