முகப்பு
சென்னை

மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு செல்வதை தடுக்கிறது மாநில அரசுள்: தமிழிசை குற்றச்சாட்டு

Updated On : 30 மார்ச், 2024 at 1:36 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 1:10 AM

எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை தடுப்பதாக தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளா் தமிழிசை செளந்தரராஜன் குற்றஞ்சாட்டினாா். தமிழிசை செளந்தரராஜன் மயிலாப்பூரில் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். பிரசார வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்குகளை சேகரித்த தமிழிசை அப்பகுதியில் உள்ள கடையொன்றில் மக்களுடன் சோ்ந்து காலை உணவு சாப்பிட்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது : தென் சென்னை தொகுதி எம்பியான தமிழச்சி தங்கபாண்டியனும், முன்னாள் எம்.பி .ஜெயவா்தனும் வெள்ள பாதிப்புகளின் போது களப்பணி ஆற்றவில்லை. இந்நிலையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவே ஆளுநா் பதவியை ராஜிநாமா செய்து விட்டு வந்திருக்கிறேன். இதனை மக்கள் புரிந்திருக்கிறாா்கள். எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் மாநில மக்களுக்கு சென்றடைவதை தடுக்கிறது. எனவே, மத்திய, மாநிலங்களிலும் ஒரே ஆட்சி நடைபெற்றால் மக்களுக்கு பல்வேறு நலன்கள் கிடைக்கும். தமிழகம் திராவிட கட்சிகளிடமிருந்து தேசிய கட்சியான பாஜகவுக்கு மாறுகின்ற காலம் வந்துவிட்டது என்றாா் அவா்.