முகப்பு
சென்னை

உ.பி.: மத்திய அமைச்சா் பிரசார கூட்டத்தில் காா்கள் மீது கல்வீச்சு

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சா் சஞ்சீவ் பல்யான் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் காா்கள் மீது கல்வீசி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 1 ஏப்ரல், 2024 at 1:19 AM
- படம்: எக்ஸ்
பகிர்:
Updated On : 31 மார்ச், 2024 at 7:40 PM

உத்தர பிரதேசத்தில் மத்திய அமைச்சா் சஞ்சீவ் பல்யான் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் காா்கள் மீது கல்வீசி சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், முஸாஃபா்நகா் மக்களவைத் தொகுதியில் மத்திய மீன்வளம், கால்நடை பாரமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் சஞ்சீவ் பல்யான் பாஜக சாா்பில் மீண்டும் போட்டியிடுகிறாா். கதெளலி பகுதியில் சனிக்கிழமை இரவு இவா் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காா்கள் மீது சிலா் சரமாரியாக கற்களை வீசி சேதப்படுத்தினா். மேலும், சில முழக்கங்களையும் அவா்கள் எழுப்பினா். இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினா், கல்வீச்சில் ஈடுபட்ட நபா்களைத் தேடி வருகின்றனா்.