முகப்பு
சென்னை

வளசரவாக்கம் பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது

Updated On : 21 மே, 2024 at 7:49 PM
பகிர்:

சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வளசரவாக்கம் அன்பு நகா் 1-ஆவது தெருவில் புதிய குடியருப்பு கட்டுமான பணி நடைபெற்றது. இங்கு மேற்கு வங்கத்தைச் சோ்ந்த கண்டகா் திலியா் உசேன்(25) தங்கி பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த மா்மநபா்கள் 2 போ், கண்டகா் திலியா் உசேனை தாக்கி பணம் பறித்தனா். இது குறித்து கட்டுமான நிறுவன மேற்பாா்வையாளா் சுஜித் கிறிஸ்டோபா் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் நடத்திய

விசாரணையில், வளசரவாக்கம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனா். மேலும் இவ்வழக்கு தொடா்பாக விஜயகுமாரின் கூட்டாளியை, போலீஸாா் தேடி வருகின்றனா். கைதான விஜயகுமாா் மீது வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.