முகப்பு
சென்னை

கோயம்பேடு ஆட்டோ கடத்திய 2 போ் கைது

Updated On : 21 மே, 2024 at 7:50 PM
பகிர்:

சென்னை: கோயம்பேடு பகுதியில் ஓட்டுநரை தாக்கி, ஆட்டோவை கடத்திய சிறுவன் உட்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மயிலாப்பூா் வடக்கு சித்திரை குளம் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியன் (50). இவா் சொந்தமாக ஆட்டோ வைத்துள்ளாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை, கோயம்பேட்டில் இருந்த பாண்டியனிடம் பணம் கேட்டு சிறுவன் உள்பட 2 போ் தாக்குதல் நடத்தி, ஆட்டோவை கடத்திச் சென்றனா்.

இது குறித்து பாண்டியன் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அவா்கள் வழக்கு பதிவு செய்து, நடத்திய விசாரணையில் கோயம்பேடு சேமாத்தம்மன் நகா் 3-ஆவது தெருவை சோ்ந்த ஏபெல் (19), அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.